சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் சுஜிதாவா இது..? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சுஜிதா.

கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுஜிதா. இயக்குநர் சூர்யா கிரண் இவரது சொந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர். பிறகு வளர்ந்த பிறகும் பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

எனினும் சீரியல்களில் நடித்த வகையில் ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை, வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக முன்னணியில் இருக்கிறார்.

கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, மைதிலி, துளசி, ஒரு கை ஓசை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார் சுஜிதா.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் கைக்குழந்தையாக இருந்தது பேபி சுஜிதான்.

அதேபோல் பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜ் உடன் இருக்கும் சிறுவனும் இந்த பேபி சுஜிதான். காதல் பரிசு படத்தில், அம்பிகாவின் மகளாக வரும் சிறுமியும் சுஜிதா தான்.

நடிகை சுஜிதா

இப்படி சினிமா, சீரியல் என மாறி மாறி நடித்தாலும் நடிகை சுஜிதா சீரியலில் மட்டுமே பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்.

சினிமாவில் அவருக்கு பெரிய வரவேற்பும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த 2012ம் ஆண்டில் தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

சுடிதார்..ஜீன்ஸ்..

சினிமாவிலும், சீரியல்களிலும் பெரும்பாலும் புடவை கெட்டப்பில்தான் சுஜிதா காணப்படுவார். பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளிலும் அவர் புடவை கட்டிக்கொண்டு வருவதுதான் வழக்கம்.

இப்படி சீரியலில், நிஜ வாழ்க்கையில் புடவை சகிதமாக தோன்றும் நடிகை சுஜிதா, தற்போது சுடிதார் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தீயாக பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version