அழகில் அம்மாவை மிஞ்சும் சுகன்யாவின் மகள்..! வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக நடித்த சுகன்யாவை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. பன்முகத் திறமையை கொண்ட நடிகை சுகன்யா ஒரு பரதநாட்டிய கலைஞர். இவருடைய உண்மையான பெயர் ஆர்த்தி தேவி.

இவரின் நடனத்தை கண்டு வியந்த இயக்குனர் பாரதிராஜா இவரது படமாகிய “புது நெல் புது நாத்து” படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். முதல் படமே அமோக வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதை அடுத்து “சின்ன கவுண்டர்” படத்தில் இவர் விஜயகந்தோடு இணைந்து நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மெச்சிக்கொள்ளும் படி இருந்தது. குறிப்பாக மனோரமா ஆச்சியோடு இணைந்து இவர் பேசிய வசனம் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்னராசு, மகாநதி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து தனது ரசிகர்கள் படையை அதிகரித்துக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல் கமலஹாசனோடு இணைந்து இந்தியன் படத்தில் நடித்திருந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 90-களில் கலக்கிய ஹீரோக்களான ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பீக்கில் இருக்கும் போதே அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய பெண் குழந்தையை சிங்கில் மதராக வளர்த்து மீடியாவின் கண்களில் படாதவாறு பார்த்துக் கொண்டார்.

இப்போது பெற்றோர்களுடன் வசித்து வரும் சுகன்யா மற்றும் அவரின் மகள் உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது சுகன்யாவின் மகள் டீன் ஏஜ்-ஐ கடந்துவிட்ட நிலையில் அம்மாவை விட பார்ப்பதற்கு அழகே தேவதையாக ஜொலிக்கிறார் என ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version