“நைட் பார்ட்டி..” சூரியாவால் பிரச்சனை வரும் என கதறிய பிரபலங்கள்..! திடுக்கிட்ட ஜோதிகா..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சமீபத்தில் நடிகர் சூர்யா ரகசியமாக ஏற்பாடு செய்திருந்த இரவு நேர பார்ட்டி ஒன்றுக்கு சென்றதும் அங்கே நடந்த விஷயங்களும் பற்றி சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நடிகை ஜோதிகாவின் 40வது பிறந்த நாள்.. அன்று ஜோதிகாவிற்கு தெரியாமல் ரகசியமாக ஒரு பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் சூர்யா.

அதில் தொகுப்பாளர்கள், பிரபல நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டோம். இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என ஜோதிகாவிற்கு தெரியாது. ஆனால் அவ்வளவு அருமையாக ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா.

அந்த இடத்திற்கு ஜோதிகா வந்து நின்றதும் அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை திடுக்கிட்டு போய்விட்டார். ஆனால், அங்கிருந்த பிரபலங்கள் அனைவரும் சூர்யாவால் எங்களுக்கு தான் பிரச்சனை..

எங்களுடைய மனைவியும் இதே போல ஏற்பாடு செய்ய சொன்னால் நாங்கள் எங்கே செல்வது. இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் இனிமேல் அதற்கு வழியே இல்லையே என்று விழி பிதுங்கி நின்றனர்.

சூர்யாவால் எங்களுக்கு பிரச்சனை வரப்போகிறது என்று கூறினார்கள் பல பிரபலங்கள். அப்போது அனைவருமே ஜோதிகாவை பற்றிய தங்களுடைய நினைவுகளை ஒவ்வொருவராக பகிர்ந்து கொண்டோம்.

அதனை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார் நடிகை ஜோதிகா. இப்படியாக அந்த இரவு நேர விருந்து கழிந்தது. மறக்க முடியாத ஒரு பிறந்தநாள் நைட் பார்ட்டி அது என்று கூறி இருக்கிறார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version