Bhavana : கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இது போகாது..! நடிகை பாவனா ஒரே போடு..!

Bhavana : தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகை பாவனா தனது சிறந்த நடிப்பை தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் ஏனைய மொழி படங்களிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.

எனினும் இவருக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணத்தால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனை அடுத்து இவருக்கு 2018 – ஆம் ஆண்டு நவீன் என்ற நபருடன் திருமணம் நடந்தது.

ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதை அடுத்து நடிப்பை விட்டு விலகுவார்கள். ஆனால் பாவனா அப்படிப்பட்ட பெண் அல்ல. திருமணத்தை அடுத்தும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் கூறி இருக்கும் விஷயம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. அதாவது எந்த ஒரு பெண்ணிற்கும் கல்யாணம் செய்து கொண்ட பிறகும் அவர்களின் திறமை எங்கும் போகாது.

நான் 15 வயதில் இருந்து நடிக்க வந்தேன். மற்றவர்களைப் போல நான் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்க்கவில்லை. எனினும் சில இயக்குனர்கள் திருமணம் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பை தர தயங்குவது ஏன் என்பதை இன்னும் புரியவில்லை.

திருமணத்துக்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கல்யாணத்துக்கு பிறகும் திறமை அப்படியே நம்முள் இருக்கும் என்பதை உறுதியாக நம்பினேன்.

அத்தோடு திருமணத்திற்கு பிறகு ஏன் நடிப்பை நிறுத்த வேண்டும் என்று யோசித்ததாக நெத்தியடி கருத்தை கூறியிருக்கிறார். இந்த கருத்தை அனைவரும் யோசித்தால் உண்மை எளிதில் புரியும்.

எனவே திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் இலக்கு மாறிவிடும் என்று நம்பப்படுவது அவரவர் மனநிலையை பொறுத்தது. மேலும் அது உண்மையானது அல்ல என்பதை நேர்த்தியான முறையில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அத்தோடு திருமணத்திற்கு பிறகு பெண்கள் ஏன் எதற்காக மாற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டார்.

பாவனாவின் இந்த பேச்சு தான் தற்போது பிரபலமாகி ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் பேசும் பொருளாகிவிட்டது. மேலும் பாவனா கூறிய கருத்து ஒரே போடு போடுவது போல உள்ளதாக பேச்சுக்கள் பரவலாக எழுந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version