என் கர்வத்துக்கு காரணம் இது தான்..! இளையராஜா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!

இசைஞானி இளையராஜா தனது இசையால் ரசிகர்களின் மனங்களை கட்டிப் போட்டவர். அவரது பாடல்களுக்கு உருகாத மனம் இருக்கவே முடியாது. அவரது பாடல்களில் சிலவற்றை குறிப்பாக பக்தி பாடல்களை தெய்வீக ராகம் என்றே சொல்லலாம். காதல், கொண்டாட்டம், அழுகை, ஆனந்தம் என எந்த ரகமான பாடல் என்றாலும் இளையராஜா, இசை சக்கரவர்த்தியாக தனது ஞானத்தை வெளிப்படுத்தி விடுவார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது, எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி என்ற பெயருக்கு நான் தகுதியானவன்தானா என்று என்னை கேட்டால் என்னை பொருத்தவரை அது கேள்விக்குறிதான்.

ஆனால் மக்கள் என்னை அப்படி அழைப்பதால் அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால் நான் அப்படி என்னை நினைத்துக்கொள்வது இல்லை. சின்ன வயதில் அண்ணனுடன் இசைக்கச்சேரிக்கு செல்லும்போது ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள். அதை கேட்கும் போது பெருமையாக இருந்தது.

தொடர்ந்து பயிற்சி பெற்று இன்னும் நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியானது. என்னுடைய கர்வமும் ஜாஸ்தியானது. ஒரு கட்டத்தில் இந்த கைதட்டல், பாராட்டு எல்லாம் பாட்டுக்கா, இசைக்கா, டியூனுக்கா, என்னுடைய திறமைக்கா என்ற கேள்வி வந்தது.

பிறகு இந்த கைதட்டல் எல்லாம் டியூனுக்குதான் என்று புரிந்து போனது. டியூன் போட்ட எம்எஸ்விக்கு தான் அந்த பெருமை என புரிந்தது. அதனால் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்ததால் என் கர்வம் மொத்தமும் தலையில் இருந்து இறங்கி விட்டது. என் கர்வத்தில் இருந்து அப்போதே வெளியே வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version