சென்னையில் நடிகை ஷகிலாவை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கிய வளர்ப்பு மகள்..! இது தான் காரணமா..?

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஷகிலா. கடந்த 1990ம் ஆண்டுகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை திணறடித்தவர் ஷகிலா.

நடிகை ஷகிலா, அவரது வளர்ப்பு மகளால் தாக்கப்பட்ட சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக, தன் பொறுப்பில் எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்திருக்கிறார் ஷகிலா.

இந்நிலையில் குடும்ப பிரச்னை குறித்து பேசுவதற்காக ஷீத்தல், அவரது சொந்த தாயார், அவரது அக்கா ஜமீலா ஆகியோர், வீட்டில் ஷகிலாவிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஷகிலாவின் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் அங்கு இருந்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷகிலாவை தாக்கி கீழே தள்ளியுள்ளார். அவரை அவதூறாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அவருடன் வந்த ஜமீலா, அவரது அம்மாவும் தாக்கியதாக ஷகிலாவை தாக்கியதாக தெரிகிறது.

அப்போது ஷகிலாவை தாக்கியவர்களை, வக்கீல் சவுந்தர்யா தடுக்க முற்பட்ட போது அவரும் அங்கிருந்த ட்ரேவை எடுத்து தாக்கப்பட்டதால் காயமடைந்தார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஷகிலாவை வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கிய சம்பவம் குறித்து, கோடம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் நடந்த போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார், பார்வையிட்டுள்ளனர். பிரபல நடிகை ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகளே தாக்கிய சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version