பெற்றோரை மீறி நடுக்கடலில் திருமணம்..! – கணவரை பிரிந்த திரௌபதி ஷீலா..! – இது தான் காரணமா..?

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷீலா.

இவர் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ஆறாவது சினம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து டூலெட், மண்டேலா, திரௌபதி, பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா XX உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.

தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பரதநாட்டிய கலைஞராக இவர் திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றும் தம்பி சோழன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய இந்த காதலுக்கு இவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களுடைய எதிர்ப்பை மீறி தன்னுடைய காதலனை கரம் பிடித்தார் நடிகை ஷீலா.

இவர்களுடைய திருமணம் நடுக்கடலில் மிதக்கும் படகில் நடந்தேறியது. வித்தியாசமான முறையில் இவர்களுடைய திருமணம் நடந்தது.

இந்நிலையில் ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்று ஒரு தகவலை பதிவிட்டு இருக்கிறார்.

பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடங்களில் கணவரை விவாகத்து செய்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சில் ஆழ்த்தி இருக்கின்றது.

இந்த முடிவுக்கு காரணம் என்ன..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என்றால் எப்படி திருமணம் செய்து கொண்டீர்கள்..? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version