பரபரப்பாக நகரும் விடாமுயற்சி.. இடியாப்ப சிக்கலில் ஹீரோயின் திரிஷா..! அப்செட்டில் அஜித்குமார்..!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் திரிஷா.

சினிமாவில் 20 ஆண்டுகள் இருப்பதே பெரிய விஷயம். அதில் கதாநாயகி தொடர்வது அதை விட பெரிய விஷயம் என, லியோ பட விழாவில் நடிகர் விஜய், திரிஷாவை நேரடியாகவே பாராட்டி இருந்தார்.

துவக்கத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக மட்டும் வந்து, டூயட் பாடிக்கொண்டிருந்த திரிஷா கொடி மற்றும் மன்மதன் அம்பு போன்ற படங்களில் வித்யாசமான நடிப்பை தந்தார்.

அதன்பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமல் அவர் இடைவெளி ஏற்பட்டது. தொடர்ந்து 96 படம் மூலம் தன் இடத்துக்கு வந்த திரிஷா, பொன்னியின் செல்வன் குந்தவையாக வந்து ரசிகர்களின் மனதை மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில் 40 வயதுகளை கடந்தும் திரிஷாவின் செழுமையான அழகை பார்த்த ரசிகர்கள், அசந்து போய்விட்டனர். உயிர் உங்களுடையது தேவி என, காதல் மொழியை பறக்க விட்டனர்.

இதையடுத்து லியோ படத்திலும் விஜய்க்கு, உதட்டு முத்தம் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

பொன்னியின் செல்வன், லியோ வெற்றி படங்களுக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

விடாமுயற்சி..

அஜித்குமார் ஜோடியாக இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக அந்த படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் ஷார்ஜாவில் துவங்க உள்ளது.

இதுதவிர மலையாளத்தில் ராம் மற்றும் ஐடென்டிட்டி என்ற 2 படங்கள், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், தமிழில் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படம் என பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார்.

சிக்கலில் திரிஷா…

அஜித்துடன் திரிஷா நடித்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த நிலையில் அங்கு ஏற்பட்ட மணல் புயல், பனிப்பொழிவு, கடும் குளிர், மழை, சூறாவளி போன்ற இயற்கை பாதிப்பால் பல நாட்கள் படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லை.

இதனால் திரிஷா தந்த கால்ஷீட் தேதிகளில் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

இப்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களுக்கு திரிஷா தேதிகள் ஒதுக்கித் தந்த நிலையில், அந்த தேதிகளில் நடிக்க விடாமுயற்சி படக்குழு, திரிஷாவை அழைக்கிறது.

இன்னும் அஜித்குமார், திரிஷா இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் பெரும்பாலும் ஷூட் செய்யப்படாமல் இருக்கின்றன.

இந்நிலையில் அதற்கான தேதிகளை ஒதுக்கித் தர முடியாமல் சிக்கலில் திரிஷா தவிக்கிறார்.

இந்த மாத இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித்குமார், வரும் மார்ச் மாதம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க வேண்டும்.

அதனால் பரபரப்பாக விடாமுயற்சி படம் நகர்ந்து வரும் நிலையில், தனக்கான தேதிகளை ஒதுக்கித் தர முடியாமல் இடியாப்ப சிக்கலில் ஹீரோயின் திரிஷா தவிக்கிறார்.

இதனால் திரிஷாவுடன் நடிக்க வேண்டிய காட்சிகளை இன்னும் முடிக்க முடியாமல் நடிகர் அஜித்குமார் அப்செட்டில் இருக்கிறார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version