யோகி பாபு வளர்ச்சி பற்றி கேள்விக்கு வடிவேலு பதில்..! – இவ்ளோ வயித்தெரிச்சலா..? விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் தலை சிறந்த காமெடி நடிகராக ரசிகர்களால் பார்க்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் அவர் திரைத்துறையில் இல்லை என்றாலும் கூட அவருடைய புகைப்படங்களை மீம்களில் அதிகம் பயன்படுத்தி அவரை லைம் லைட்டிலயே வைத்திருந்தார்கள் அவருடைய ரசிகர்கள்.

ஆனால், சமீப காலமாக அவருடன் பயணித்த நடிகர் நடிகைகள் கூறிய தகவல் மற்றும் அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் நடிகர் விஜயகாந்த் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் என வடிவேலுவின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிப்போனது.

சக நடிகர்களை வளர விடாமல் தயாரிப்பாளர்கள் சக காமெடி நடிகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்க முன் வந்தும் கூட அவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்காதீர்கள் 2000, 5000 கொடுத்தால் போதும்.

நீங்கள் பணம் இருக்கிறது என கொடுத்து விடுவீர்கள். அடுத்து வரக்கூடிய தயாரிப்பாளரும் அதே போல லட்சக்கணக்கில் கொடுக்க வேண்டும் என்று துணை காமெடி நடிகர்கள் எதிர்பார்ப்பார்கள், அதனால் அவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்காதீர்கள் என்று தயாரிப்பாளர்களை தடுத்து இருக்கிறார் வடிவேலு.

இந்த செயல்களை சக காமெடி நடிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியில் கொண்டு வந்தனர். இதனை நாங்கள் எத்தனையோ டிவி மீடியாக்களில் கூறியிருக்கிறோம். ஆனால், அது எதுவுமே வெளிவந்தது கிடையாது.

சமூக வலைதளங்கள் மூலமாக தான் இந்த விஷயங்கள் எல்லாம் ரசிகர்களை போய் சேர்ந்திருக்கிறது. சமூக வலைதலங்கால் இல்லை என்றால் எங்களுடைய குமுறல்கள் வெளியே வராலாமே போயிருக்கும். வடிவேலுவின் உண்மை குணம் என்ன என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குமுரினார்கள் சக காமெடி நடிகர்கள்.

உச்சகட்டமாக தன்னுடன் நடித்த காமெடி நடிகர்கள் யாராவது இறந்து விட்டால் அவர்களுடைய இறுதி சடங்கு கூட செல்லாமல் வன்மம் பிடித்தவராக இருக்கிறார் வடிவேலு என்று காமெடி நடிகர்கள் பலரும் வடிவேலு மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவருடைய நடவடிக்கைகளும் அப்படியே இருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலுவிடம் உங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர்கள் நாகேஷ் சுருளிராஜன் உள்ளிட்ட பல நடிகர்களை பெயரை கூறிய வடிவேலு தற்கால நடிகர்கள் பெயரை யாரையும் கூறவில்லை.

அதிலும் ஒரு பத்திரிகையாளர் குறிப்பிட்டு நடிகர் யோகி பாபுவின் காமெடி அவருடைய வளர்ச்சி அவருடைய நடிப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்ற கேள்விக்கு நடிகர் வடிவேலு யோகி பாபு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மாறாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் ஏழரை கூட்டவே நீ இங்கு வந்திருக்கிறாய் என்று எகிறிய காணொளி வைரலாகி வருகின்றது. ஒரு சக நடிகரை பற்றி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. அவரைப் பிடிக்கவில்லை என்றாலும் கூட பொதுவெளியில் அத்தனை பேர் முன்னிலையில் அவர் நன்றாக நடிக்கிறார் சிறப்பான எதிர்காலம் அவருக்கு இருக்கிறது என்று கடமைக்கு கூட ஒரு பதிலை கூற கூச்சப்படும் அளவுக்கு வடிவேலு தன்னை ஒரு பாதுகாப்பற்றவராக உணர்கிறார்.

இப்படி இருக்கும் குணம்தான் நடிகர் வடிவேலுவை சினிமாவிலிருந்து நீண்ட தூரம் ஒதுக்கி வைத்திருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version