மனுசனா இருந்தா தானே செத்த ஏலவுக்கு வருவாங்க..!! வடிவேலுவை மோசமாய் விமர்சித்த பிரபல நடிகர்..!

கவுண்டமணி, செந்தில் காமெடியன்களுக்கு பின்னால் வைகைப்புயல் வடிவேலு தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவை பொருத்த வரை இவருக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது என்று கூறக்கூடிய அளவு காமெடியில் கலக்கியவர்.

இவரோடு காமெடி காட்சிகளில் நடித்த மற்ற நடிகர்களும் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல பிரபலம் ஆகி விடுவார்கள். எனவே திரை உலகில் தனக்கு என்று ஒரு டீம்மை வைத்துக்கொண்டு காமெடி காட்சிகளில் பின்னி பெடல் எடுத்த வடிவேலு இடையில் ஒரு மிகப்பெரிய இடைவெளியை சினிமாவில் விட்டு விட்டார்.

இதனை அடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கும் இவர், தன்னோடு நடித்த பல நடிகர்கள் பணம் இல்லாமல் வறுமையில் வாடும் போது உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அந்த வகையில் இவரோடு இணைந்து நடித்து பலரையும் சிரிக்க வைத்த நடிகர் போண்டா

மணி அண்மையில் இறந்துவிட்டார். இவர் இறப்புக்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயல் இழந்து சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இவர் பண உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவை பார்த்து பிரபல நடிகர்களான தனுஷ் மற்றும் விஜயசேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் இவருக்கு பண உதவி செய்திருந்தார்கள். ஆனால் வடிவேலு ஒரு ரூபாய் கூட கொடுத்து உதவவில்லை.

இந்நிலையில் போண்டா மணி வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி பரவியதை அடுத்து அவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்வில் பல துணை காமெடியன்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் வடிவேலு அந்த இறுதிச் சடங்குக்கு கூட வரவில்லை. இதை குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அந்த வகையில் வடிவேலு யார் செத்தாலும் வரமாட்டார் என்று நடிகர் சாரபாம்பு சுப்புராஜ் பேட்டி ஒன்று பேசி இருக்கிறார். இந்த பேச்சானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மனிதன் எப்படி இருந்தாலும் அவரது இறப்பு நிகழ்வுக்கு சென்று துக்கத்தை பகிர்ந்து கொள்வது தான் மனிதநேயம் என்பதை கூட தெரியாமல் இருக்கும் வடிவேலுவை பலரும் பல வகைகளில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version