போடா போடி படத்தை பார்த்து விட்டு வரலட்சுமியிடம் ஜோதிகா சொன்ன அந்த வார்த்தை..!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி சரத்குமார் ஒரு மிகச் சிறந்த தமிழ் நடிகை இவர் சிலம்பரசனோடு இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

போடா போடி..

இவர் போடா போடி திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் பாலா இயக்கிய திரைப்படமான தாரை தப்பட்டை திரைப்படத்தில் இவர் நடித்திருந்த விதத்தைப் பார்த்து பலரும் இவரை பாராட்டினார்கள். மேலும் இவரது நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனை அடுத்து தமிழ் படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் தனித் திறமையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நடித்து வரும் இவர் தெலுங்கில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார்.

சினிமாக்களில் ஹீரோயினியாக மட்டுமல்லாமல் வில்லத்தனமான கேரக்டர் ரோல்களையும் நெகட்டிவாக செய்து மக்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்ட வரலட்சுமி இடையில் சற்று உடல் எடை கூடி காணப்பட்டார்.

அதனை அடுத்து போதுமான உடற்பயிற்சிகளை செய்து தற்போது மீண்டும் ஸ்லிம்மாக மாறி இருக்கும் வரலட்சுமிக்கு அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்து கொண்டு இருப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கிறார்.

ஜோதிகாவின் வார்த்தைகள்..

இந்நிலையில் தற்போது இவர் நடித்த முதல் படமான போடா போடி படத்தை பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து பலரும் தன்னை பாராட்டியதாக கூறியிருக்கும் வரலட்சுமி, நடிகை ஜோதிகா சொன்ன வார்த்தை இன்று வரை நினைவில் உள்ளதாக கூறியிருக்கிறார்.

அந்த வகையில் போடா போடி படத்தை பார்த்துவிட்டு தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜோதிகா வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்று சற்று கூட எதிர்பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்.

அத்தோடு ஜோதிகா போன் செய்து கூறிய விஷயத்தை மறக்கவே முடியாது. போடா போடி படத்தை பார்த்துவிட்டு தனக்கு போன் செய்த ஜோதிகா மேடம் என்னுடைய நடிப்பை பார்த்தால் அறிமுக நடிகையைப் போல் இல்லை என்று கூறியதோடு ஒரு 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் ஒரு நடிகை இருந்தால் எப்படி நடிப்பாரோ அது போல என் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டினார்.

இதைத்தான் எனக்கு திரை வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சன்மானமாக நான் கருதுகிறேன் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் படு வேகமாக பரவி வருகிறது.

மேலும் வளர்ந்து வரும் நடிகைகளை வளர்ந்த நடிகைகள் ஊக்கப்படுத்த கூடிய வகையில் ஜோதிகா பேசிய செயலானது அவருக்கு சிறப்பான படங்களில் நடிக்க கூடிய உத்வேகத்தை கொடுத்து இருக்கும் என கூறலாம்.

எனவே வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்களுக்கு ஊக்கத்தை தருவதின் மூலம் எண்ணற்ற உத்வேகத்தை பெறுவார்கள். அந்த வகையில் ஜோதிகா வரலட்சுமி சரத்குமாருக்கு போன் செய்து பாராட்டிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version