அசல் இடி முழக்கம் ஆரம்பம்.. “விடாமுயற்சி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ..!

லைக்கா புரடக்சன் தயாரிப்பில் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்து வருகிறது.

விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித், மகிழ்திருமேனி, அனிருத் கைகோர்ப்பால் இந்த படம் மாஸ் ஹிட் ஆக அமையும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். வில்லன் கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருக்கிறார். ஆரவ், ரெஜினா போன்றவர்களும் நடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 4ம் தேதி, அஜர்பைஜானில் துவங்கிய படப்பிடிப்பு, 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது.

இடையிடையே பனிப்பொழிவு, கடும் குளிர், மணல் புயல், சூறாவளி காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது.

விடா முயற்சி..

விடாமுயற்சி படப்பிடிப்பை வரும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட்டு வரும் அஜீத்குமார், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக, பல மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் பெரிய அளவில் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

விடாமுயற்சி படத்தில் மொத்தம் 5 பாடல்களும், அதில் ஒன்று மட்டும் அஜீத்குமார் – திரிஷா நடிப்பில் டூயட் பாட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அசல் இடிமுழக்கம்..

இந்த சூழலில் அசல் இடி முழக்கம் போல, அஜீத்குமார் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.
அசல் இடி முழக்கமாக விரைவில் வெளியாக இருக்கும் அஜீத்குமாரின் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக, அஜீத்குமார் ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version