கேப்டனை வடிவேலு திட்டுவதற்கு இது தான் காரணமாம்.. காரி துப்பும் ரசிகர்கள்..!

திரை உலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு அசைக்க முடியாத நகைச்சுவை நாயகனாக உருவெடுத்த வைகை புயல் வடிவேலு பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இவரோடு இணைந்து நடித்த அத்துணை நடிகர்களும் வடிவேலு தங்களுக்கு துரோகம் செய்து தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை பல நாட்களாக தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் வடிவேலுவை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே கேப்டன் விஜயகாந்த் தான். எனினும் கேப்டன் அவர்களை மோசமாக பேசி வடிவேலு பகையை வளர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரை சென்று வடிவேலு நிச்சயம் பார்க்க மாட்டார் என்று கூறிவந்த நிலையில் அவரது மறைவுக்குப் பின்னும் இரங்கல் தெரிவிக்க சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறிய படி தான் இறுதி அஞ்சலிக்கு கூடி வடிவேலு செல்லவில்லை.

இதனை அடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜயகாந்தின் தொண்டர்களும் கடுமையாக வடிவேலுவை திட்டி தீர்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் வடிவேலு மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த் பற்றி அரசியல் மேடையில் திட்டி பேசி இருப்பார்.

அப்படி தன்னை வளர்த்து விட்ட மனிதரை வடிவேலு அப்படி பேச காரணம் என்ன என்று தற்போது பத்திரிக்கையாளர் பயில்வான் சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்தக் கருத்தில் அவர் சின்ன கவுண்டர் படத்தில் படம் முழுவதும் குடை பிடிக்கும் படி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு தனது ஊர்காரர் என்பதால் படம் முழுவதும் குடை பிடித்தபடி வரட்டும் என விஜயகாந்த இயக்குனரிடம் கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனரோ ஓரிரு காட்சிகளில் வடிவேலு வந்தால் போதும் என்று நினைத்திருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க ஒருமுறை கேப்டன் வீட்டில் துயரச்சம்பவம் நடந்த போது கார் பார்க்கிங்கில் சின்ன பிரச்சனை ஏற்பட்டு குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்திற்கு காரணமே வைகை புயல் வடிவேலு தான். மேலும் வைகை புயல் வடிவேலுவை பற்றி எந்த ஒரு சூழ்நிலையிலும் விஜயகாந்த் தவறாகவே பேசவில்லை.

இந்த சூழ்நிலையில் வடிவேலு தன்னைப் பற்றி அப்படி பேசியது தவறு என்று மன வருத்தத்தில் இருந்தார். மேலும் அரசியல் காரணமும் வடிவேலுவை கோபப்பட செய்து கோபத்தின் உச்சத்தில் சிந்திக்கும் திறனை குறைத்ததின் காரணத்தால் தான் கேப்டனை பற்றி தரக்குறைவான வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.

இந்தப் பிரச்சனையின் காரணமாகத்தான் வடிவேலு கேப்டனின் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கருத்தினை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு வந்திருக்க வந்திருக்காது. இது என்னுடைய கருத்து என்று தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version