விஷால் உதயநிதி இடையே என்ன பிரச்சனை தெரியுமா..? இதனால் தான் கலைஞர்100 நிகழ்ச்சிக்கு வரலயாம்..!

செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகர் விஷால்.இவர் நடித்த படங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து சறுக்கல்களை சந்திக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் திணறி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் இவர் நடிப்பில் வெளி வந்த மார்க் ஆண்டனி படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படமானது அதிகளவு வசூலை ஈட்டியது என கூறலாம்.

இதனை அடுத்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் மாஸ் வெற்றியை இவருக்கு கொடுக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

உங்களுக்கு நன்றாகவே தெரியும் நடிகர் விஷாலும், உதயநிதி ஸ்டாலினும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருந்தார்கள். மேலும் இவர்கள் இருவரும் தங்களது நட்பை பல முறை மேடைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் சமீப காலமாக இவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இருவருது நட்பும் தற்போது விரிசல் அடைந்து உள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் லத்தி, மார்க் ஆண்டனி போன்ற விஷால் நடித்த படங்களை ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் வாங்கி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விஷால் மற்றும் உதயநிதி இடையே ஏதோ ஒரு பிரச்சனை ஓடி வர கூடிய காரணத்தால் தான் திரைப்படத்துறை சார்பாக கொண்டாடப்பட்ட கலைஞர் 100 விழாவில் திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஷால் கலந்து கொள்ளவில்லை.

அதுமட்டுமல்லாமல் உதயநிதியுடன் இவருக்கு ஏற்பட்டிருக்கும் கருத்து வேற்றுமையின் காரணமாக விஷால் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக தான் இவர் அண்மை பேட்டியில் மோடி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறியதாக செய்திகள் தீயாய் பரவுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version