இதனால தான் கிளாமரான போட்டோஸ் போடுறேன்.. VJ மகேஸ்வரி ஓப்பன் டாக்..!

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ மகேஸ்வரி.

குறிப்பாக விஜய் டிவியில் புதுக்கவிதை என்ற தொடரில் காவ்யா என்ற கேரக்டரிலும் நடித்தார். தாயுமானவன் என்ற சீரியலிலும் அவர் நடித்தார்.

இரண்டு தொடர்களில் மட்டுமே நடித்த நிலையில், தனிப்பட்ட சில காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுவதாகவும், இனி நடிக்காமல் தொகுப்பாளராக மட்டுமே செயல்பட உள்ளதாகவும் அறிவித்தார்.

சன் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை VJ மகேஸ்வரி தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில், விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக VJ மகேஸ்வரி நடித்திருந்தார்.

VJ மகேஸ்வரி

கடந்த 2005ம் ஆண்டில், VJ மகேஸ்வரி ஆடை வடிவமைப்பாளரான சாணக்யன் என்பரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தார். எனினும் 2010ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து விட்டனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக VJ மகேஸ்வரி கலந்துக்கொண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் பயங்கர சண்டைக்கோழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

கிளாமர் டிரஸ்

தமிழில் தொடர்ந்து சில படங்களில் நடித்துவரும் VJ மகேஸ்வரி, சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

அதுவும் கிளாமர் டிரஸ்சில் அவர் அப்டேட் செய்யும் புகைப்படங்களில் முன்னழகு, பின்னழகு தூக்கலாக தெரியும் விதமாக அவர் பதிவிடுவது ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற VJ மகேஸ்வரியிடம், இப்படி தொடர்ந்து கிளாமர் டிரஸ்சில் உங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.

நயன்தாரா அழகு

இதற்கு பதிலளித்த VJ மகேஸ்வரி, எனக்கு சின்ன வயதில் இருந்தே அழகான ஆடைகளை அணிவதில் அதிக விருப்பம் இருந்து வருகிறது. எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். நயன்தாரா அழகு ரொம்பவும் பிடிக்கும்.

அதனால் அவரை போலவே நானும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

என்னுடைய மகனை நான் நன்றாக வளர்க்கிறேன். அவனை சரியாக பார்த்துக்கொள்கிறேன். நான் வாழப் போகிற காலகட்டத்தில், எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புகிறேன், என்று VJ மகேஸ்வரி கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version