என் புருஷன் எனக்கு பண்ண துரோகம்.. Matrimony’ல 2வது கல்யாணத்துக்கு.. VJ மகேஸ்வரி ஓப்பன் டாக்..!

தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த காலகட்டத்திலேயே தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர்.

இவருடன் ஒரு முறையாவது பேசிவிட மாட்டோமா என்று தொலைபேசியும் கையுமாக காத்திருந்த இளவட்டங்கள் ஏராளம். தன்னுடைய இளம் வயதில் எந்த அளவுக்கு கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாரோ அதே கவர்ச்சி அழகு மற்றும் கட்டு குலையாத தோற்றம் என தற்போதும் அழகாக காட்சி அளிக்கிறார் VJ மகேஸ்வரி.

மேலும், திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஜே மகேஸ்வரி அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

மீடியா துறையில் விஜே மகேஸ்வரி கால் பதித்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார் என்றாலும் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு பல்வேறு சிக்கல்கள். திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்து விட்ட நிலையில் கணவரை பிரிந்தார் விஜே மகேஸ்வரி.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உங்களால் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத துரோகம் என்றால் எது..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஜே மகேஸ்வரி, துரோகம் என்று கேட்டால் நிறைய துரோகங்களை நான் அனுபவித்திருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள், குறிப்பாக என்னுடைய புருஷன் எனக்கு செய்த துரோகம்.. இதை நினைத்து நான் புலம்ப போவதில்லை.

இதிலிருக்கக்கூடிய நல்ல விஷயங்களை நான் எடுத்துக் கொண்டேன். இதுபோன்ற ஒரு விஷயத்தை மற்றவருக்கு கனவில் கூட செய்து விடக்கூடாது என்றும் என்னுடைய எதிரிக்கு கூட இப்படி ஆன துரோகங்கள் நடந்து விடக்கூடாது.. அதற்கு நான் எந்த வகையிலும் காரணமாக இருந்து விடக்கூடாது என்று நான் கவனமாக இருக்கிறேன்.

எனக்கு துரோகம் நடந்து விட்டது என்பதற்காக அதை நினைத்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தால் என்னுடைய வாழ்க்கையை யார் கவனிப்பது..? அடுத்த அடுத்த நகர வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்ட பிறகு ஒரு அம்மாவாக என்னுடைய தாய் மேட்ரிமோனி தளங்களில் எனக்கு மாப்பிள்ளை தேடினார். ஆனால் எதுவும் சரியாக அமையாத காரணத்தினால் உனக்கு என்ன விருப்பமோ அது போல் இரு..!

உன்னுடைய விருப்பம்.. உன்னுடைய வாழ்க்கையை உன்னால் பார்த்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா..? நீ இப்பொழுதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறாய்.. குழந்தையின் நன்றாக பார்த்துக் கொள்கிறாய்.. என்னையும் நன்றாக பார்த்துக் கொள்கிறாய்.. அதுவரைக்கும் சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.

அடுத்த திருமணம் குறித்து நான் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பேசி இருக்கிறார்கள் விஜே மகேஸ்வரி. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version