எனக்கும் அந்த தேவை இருக்கு.. ஆனா, ரெண்டாவது கல்யாணம் பண்றதுக்கு.. – VJ மகேஸ்வரி ..!

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வீஜே மகேஸ்வரியின் மற்றொரு பக்கத்தை தெரிந்து கொண்டால் பலருக்கும் மனம் சங்கடங்கள் ஏற்படும்.

மற்றவர்களை சிரிக்க வைத்து மனதினை லேசாக மாற்றக்கூடிய வீஜே மகேஸ்வரியின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் உள்ளதா? என்று ஒவ்வொருவரும் எண்ண கூடிய வகையில் தற்போது அவர் பகிர்ந்து இருக்கக்கூடிய விஷயம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

எனக்கு தேவை இருக்கு..

பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்ட வீஜே மகேஸ்வரி சின்னத்திரைகளில் நிகழ்ச்சிகளை படு ஜோராக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடிய குணம் கொண்டதால் இவருக்கு அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய பிறகு வெளியே வந்தவுடன் பலரும் இவரை மோசமாக விமர்சனம் செய்தார்கள். எனினும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.

அண்மையில் வெளி வந்த விக்ரம் திரைப்படத்தில் வீஜே மகேஸ்வரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் முதல் மனைவியாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவோ சோகங்களை தனது மனதில் வைத்திருக்கும் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் பேசி இருந்த போது எனக்கும் தேவை இருக்கு எனினும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பயமாக உள்ளது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்.

முதல் திருமணம் சரியாக அமையாத காரணத்தால் கணவரை விட்டு பிரிந்து தன் மகனோடும் தாயாரோடும் வசித்து வரும் இவர் பல்வேறு வகையில் சிங்கிள் மதர் படுகின்ற வேதனையை பற்றி கூறியிருக்கிறார்.

அத்தோடு தான் திருமணம் செய்து கொண்டால் அது சரியாக வருமா? தன் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பல்வேறு கோணங்களில் அவர் சிந்தித்து இருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

என் பையனுக்கு அப்பா..?

அந்த வகையில் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமா? என்று யோசிக்கும்போது பல விஷயங்கள் மனதுக்குள் எழுவதாகவும் குறிப்பாக தன்னுடைய மகன் தன்னை நம்பித்தான் இருக்கிறார் என்ற விஷயத்தை பதிவு செய்து இருக்கிறார்.

அத்தோடு தான் ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவர் என் மகனுக்கு அப்பாவாக மாறக்கூடிய மனநிலையில் இருப்பாரா? இதெல்லாம் நடக்குமா? என்ற பயம் அவருக்குள் எப்போதும் இருந்து வருகிறதாம்.

இந்நிலையில் இரண்டு பேர் மறுமணம் குறித்து இவரிடம் அணுகி இருக்கிறார்கள். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பத்தையும் தெரிவித்தார்களாம்.

ஏற்கனவே நடந்து முடிந்த திருமணம் தோல்வி இதை தந்தது அடுத்து இரண்டாவதாக செய்யப்படும் திருமணம் சரியாக வருமா? என்று மனதில் பலவிதமான யோசனைகள் ஏற்பட்டு பயத்தை தருவதால் இரண்டாவது திருமணம் குறித்த யோசனையை அது தடுத்துவிட்டது என வீஜே மகேஸ்வரி கூறியிருக்கிறார்.

அவர் நினைப்பது சரி தான் தனக்கு கணவராக வரக்கூடியவர் கண்டிப்பாக மகனுக்கு அப்பாவாக இருப்பாரா? என்ற கேள்விக்கு விடை தெரியாத போது தன்னையே நம்பி இருக்கும் மகனுக்காக வாழ்வது தான் சரி என பலரும் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் மகனின் எதிர்காலத்திற்கு பிறகு அவருக்கு ஒரு துணை அவசியம் தேவை அதனால் மீண்டும் ஒரு முறை யோசிக்க வேண்டியது அவசியம் என்று அட்வைஸ் செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version