ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி யார் தெரியுமா..?

இன்று சீரியல்களின் ஆதிக்கம் அதிக அளவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலை கூறலாம். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி பற்றி இந்த பதிவில் முக்கியமான சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே இன்று சின்ன திரையில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கும் பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளை போலவே இன்று அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கும் நடிகைகளாக திகழ்கிறார்கள்.

ரோஜா சீரியல்..

ரோஜா சீரியல் ஆனது மக்கள் விரும்பும் சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்க கூடிய வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலை வயது வந்த இளைஞர்கள் முதல் வயதான நபர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் விரும்பிப் பார்த்தார்கள்.

இதற்குக் காரணம் இந்த சீரியலில் நடித்த ஹீரோயினி பிரியங்கா நல்காரி தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதோடு தனக்கு ஜோடியாக நடித்த நடிகரை அர்ஜுன் சார் என்று அழைக்கும் போது அதில் இருக்கும் ரொமான்டிக் வேறு எதிலும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு இருந்தது.

இந்த பிரியங்கா நல்காரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே நடனத்தை கற்றுக் கொண்ட இவர் தனது எட்டாவது வயதிலேயே நடிகை பத்மபிரியாவிற்கு தங்கையாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ளது. எனினும் சில படங்களில் நடித்து முடித்த இவர் கல்வி கற்க வேண்டி இருந்ததன் காரணத்தினால் திரைப்படங்களுக்கு ஒரு பிரேக் கொடுத்தார்.

இன்டீரியர் டெக்கரேஷன் படிப்பை முடித்துவிட்ட பிறகு மீண்டும் திரை உலகப் பிரவேசத்திற்கு தயாரான பிரியங்கா தனக்கு கிடைத்த தங்கை வேடங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்று நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தெலுங்கு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இது வரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழில் ரோஜா சீரியலின் மூலம் பேமஸான இவர் தற்போது ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நடித்தவர், திடீரென்று அதிலிருந்து விலகி விட்டார்.

இதனை அடுத்து நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வரும் இவர் சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

கடைசி படமான காஞ்சனா..

தமிழ் திரைப்படங்களை பொருத்தவரை பிரியங்கா முதல் முதலாக தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற சுந்தர் சி படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியின் தோழியாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்ட இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்ததே ஒழிய திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஏற்கனவே ராகவா லாரன்ஸ் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதால் இவரது டான்ஸை ரோஜா நாயகி விரும்பி ரசிப்பாராம்.

மேலும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா படம் தான் இவருக்கு கடைசி படமாக அமைந்து விட்டது. இதற்குப் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை எதிர்பார்த்து பிரியங்கா இருக்கக்கூடிய வேளையில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேருமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

தற்போது உங்களுக்கு பிரியங்கா நல்காரி யார் என்பது மிகத் தெளிவாக புரிந்து இருக்கும். இவரது நடிப்பிற்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திராவிலும் அதிக அளவு ரசிகர் படை உள்ளது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version