வடிவேலுவுடன் அஜித் நடிக்க மறுக்க உண்மையான காரணம் இதுதான்..! நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தல அஜித் இருப்பது உங்களுக்கு தெரியும். அஜித்தை பொறுத்த வரை திரையுலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்திருக்கும் உச்சகட்ட நட்சத்திரம்.

இவரைப் போலவே கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு காமெடியில் கலக்கி தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கும், அஜித்துக்கும் இடையே மோதல் உள்ளதா? இந்த காரணத்தால் தான் தல அஜித் படத்தில் வடிவேலு நடிக்க முடியாமல் போனதா என்ன? என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

வடிவேலு அஜித்தோடு இணைந்து நடித்த கடைசி படம் ராஜா. இந்த படத்தில் வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அஜித்துக்கு தாய் மாமாவாக நடிக்கக்கூடிய ரோல்.

ஒரு தாய் மாமன் எப்படி மருமகனிடம் பேசுவாரோ அது போல வாடா, போடா என்று ஒருமையில் அஜித்திடம் பேசி கலாய்க்க கூடிய வேடத்தை செய்தார். அவர் படம் முடிந்த பிறகும் அஜித்துக்கு உரிய மரியாதையை தராமல் ஒருமையிலே அழைத்து இருக்கிறார்.

சூட்டிங் முடிந்த பின்பும் அஜித்தை வாடா, போடா, என்னடா என்று ஒருமையில் அழைத்ததை அஜித்தால் ஜீரணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனை அடுத்து இது போல பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்பதை முகபாவனையின் மூலமே வெளிப்படுத்துகிறார்.

இதையும் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து அது போலவே பேசி வந்த வடிவேலுவை பற்றி இயக்குனர் எழிலிடம் இது போல அவர் என்னிடம் பேச வேண்டாம் என கூறும் படி சொல்லி இருக்கிறார்.

மேலும் வடிவேலு தன்னிடம் நடந்து கொள்ளக்கூடிய பேச்சு முறைகள் பிடிக்கவில்லை என்று இயக்குனர் எழிலிடம் அஜித் கூறிவிட்டார். இதனை அடுத்து இந்த படமும் முடிந்து விட்டது.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமான அஜித்திடம் வடிவேலுவை இணைத்து நடிக்க கேட்ட இயக்குனர்களிடம் வடிவேலுவா.. வேண்டாம் எனக் கூறியதோடு அவர் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை தர மறுத்தார்.

இதனை அடுத்து அஜித் படத்தில் வடிவேலு நடிக்காத காரணத்தை பிரபல இயக்குனர் எழில் மிக நேர்த்தியான முறையில் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் கருத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி இருப்பதோடு பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version