கௌதமியின் மகளை.. நடிகர் கமல் என்ன செய்ததற்காக.., கௌதமி கமலை விட்டு பிரிந்தார் தெரியுமா..?

நடிகை கௌதமி மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில், சமீபத்தில் வானொலி ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி கமல்ஹாசனை ஏன் பிரிந்தீர்கள்..? அவர் என்ன செய்தார்..? என்ற கேள்விக்கு கடுப்பாக ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.

அவர் என்ன காரணம் கூறினார் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பு சமீபத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியில் பேசிய பொழுது முதலில் நான் கௌதமியை பார்த்தபோது அவர் ஒரு கிளாமரான பெண் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார்.

இவருடைய இந்த பேச்சு சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டானது. தமிழ் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கின்றது. கமல்ஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் கமல்ஹாசன் திரை வரலாற்றில் தற்போது வரை ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து தக்லைஃப் என்ற திரைப்படத்தின் மூலம் மணிரத்தினத்துடன் இணைந்துள்ளார் நடிகர் கமலஹாசன். சினிமா வாழ்க்கையில் நடிகர் கமலஹாசன் ஜாம்பவான் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் என்பதும் பலரும் அறிந்ததே. தன்னுடைய தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களால் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகர் கமல்ஹாசன் என்பதை யாரும் மறக்க முடியாது.

தன்னுடைய இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்த கமலஹாசன் நடிகை கௌதமியுடன் திருமணமே செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஆனால், கடைசியாக கௌதமியையும் பிரிந்தார் என்பதுதான் கமலஹாசன் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு.

இப்படிப்பட்ட சூழலில் கௌதமி குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியது. அவர் பேசியதாவது காதலில் வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன. கௌதமி எனக்கு ஒரு துணைவியாக வருவார் என்று நான் நினைத்தது கூட கிடையாது.

முதலில் அவரை பார்க்கும் பொழுது ஒரு கிளாமரான பெண் என்று தான் நினைத்தேன். ஆனால், அவருடன் பழகும் போது தான் அவரது சிந்தனை வடிவம் என்னை கவர்ந்தது.

அதனை அவர் வெளியே காட்டிக் கொண்டதில்லை. அதன் பின்னர் எனக்கு நட்பாகவும் உறவாகவும் மாறினார். வாழ்க்கை துணையாகவும் இருந்தார் என கூறியிருக்கிறார் கமலஹாசன்.

இது ஒருபக்கம் இருக்க, நடிகை கௌதமியிடம் கமலஹாசனை ஏன் பிரிந்தீர்கள் என்று வானொலி பேட்டி ஒன்று கேள்வி எழுப்பிய போது கௌதமி ஒரே வார்த்தையில் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது நான் என்னுடைய மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத்தான் கமல்ஹாசனை பிரிந்தேன் என கூறியிருந்தார். தொடர்ந்து இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டாம் எனவும் முட்டுக்கட்டை போட்டு விட்டார் கௌதமி.

இதனை தொடர்ந்து, நடிகர் கமலஹாசன் தன்னுடைய மகளை என்ன செய்தார்..? என்று கமல்ஹாசனை விட்டு பிரிந்தே சென்று விட்டார் கௌதமி. அந்த அளவுக்கு என்ன செய்துவிட்டார்.. என்று விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.

இன்னும் சிலர் இந்த விவகாரத்திற்கு கண், காது, மூக்கு வைத்து அதற்கு உயிரூட்டி பல்வேறு கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இந்த விவகாரத்தில் தங்களுடைய கருத்தை கூறாத வரை யார் எதை சொன்னாலும் அதனை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், கமலஹாசனை பிரிந்து சென்றது மட்டுமில்லாமல் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் கௌதமி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பு வேண்டுமென்பதால் கமல்ஹாசனை பிரிந்தேன் என்று கூறிய கௌதமி.. அவர் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்று இறங்கி வேலை செய்யும் அளவுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன்..? என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது..

என்ன காரணமாக இருக்கும் என்று உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version