Mumtaj : சினிமாவில் இருந்து காணாமல் போன மும்தாஜ்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Mumtaj : தமிழ் திரையுலகில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் டி ராஜேந்திரனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வடக்கத்திய இறக்குமதியான நடிகை நக்மா கான் தனது பெயரை படத்திற்காக மும்தாஜ் என மாற்றிக் கொண்டார்.

இவரின் கவர்ச்சி நடனத்தை நீங்கள் சாக்லேட் படத்தில் இடம் பிடித்த மலை, மலை பாடலில் பார்த்து மலைத்து போய் இருக்கலாம். அது போலவே நடிகர் பிரசாத்தோடு ஸ்டார் படத்தில் குத்தாட்டம் போட்ட மச்சினியே மச்சான் மச்சினியே பாடல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்த இவர் குஷி படத்தில் ஆடிய கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து அதிகளவு ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாகவும் இளைஞர்கள் விரும்பும் இதய ராணியாக திகழ்ந்த மும்தாஜ் சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது இந்த கவர்ச்சி நடிகை எங்கே சென்றார் என்று தெரியாமல் பலரும் இருக்கிறார்கள். மேலும் இவர் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரு படத்தை எடுத்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்கும் விஷயம் பலருக்கும் தெரியாது.

மும்தாஜ் இஸ்லாமிய வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சினிமாவில் நடிப்பதோ, சினிமாவை பார்ப்பதோ தவறு என நிறைய இஸ்லாமியர்கள் நினைத்து வருகிறார்கள். இந்நிலையில் சினிமாவில் இருந்து ஏன் காணாமல் போனார் என்பதற்கான காரணத்தை பயில்வான் கூறி இருக்கிறார்.

இதில் நடிகை மும்தாஜ்க்கும் ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய தொழில் அதிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து இவர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியதோடு திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்திருந்தார்.

அந்த கட்டுப்பாட்டிற்கு மும்தாஜ் தலையாட்டி அந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சினிமாவை மறந்து விட்டார் என்ற விஷயத்தை திரைவிமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version