நீ எனக்கு வேண்டாம்.. நடிகை சினேகா எடுத்த திடீர் முடிவு..! – பலரும் அறியாத பகீர் ரகசியம்..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சினேகா புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அற்புத நடிகை.

இவர் தமிழில் பிரபல நடிகர்களோடு இணைந்து நடித்து தனது நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய சினேகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம்..

நடிகை சினேகா நடிகர் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை அடுத்து ஆனந்தம் என்ற படத்தில் நடித்திருந்த இவர் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலின் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து இவருக்கு பாட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பிரசன்னாவோடு நடிக்கும் போது இருவர் இடையேயும் காதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஆசைக்கொரு மகள் ஆஸ்திக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன இவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இவர் தயாரிப்பாளரான நாக் ரவி என்பவரோடு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

இதனை அடுத்து இருவரும் வைர மோதிரங்களை மாற்றிக் கொண்டார்கள். எனினும் இவர்கள் திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடக்காததற்கு காரணம் என்ன இது வரை புரியாத புதிராக இருக்கக்கூடிய இந்த விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நின்று போன திருமணம்..

இந்த சூழ்நிலையில் நடிகை சினேகா ஏன் அந்த தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற பரபரப்பான தகவலை பிரபல நடிகர் மற்றும் திரை விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் இந்த நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த இரண்டு மாதங்களில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு தயாரிப்பாளர் நாக் ரவியை திருமணம் செய்து கொள்ளாமல் விலகி விட்டார்.

தங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து நீ எனக்கு வேண்டாம் என்று சினேகா எடுத்த திடீர் முடிவு காரணமாகத் தான் அந்த தயாரிப்பாளரோடு நடக்க இருந்த திருமணம் தடைபட்டது.

இதனை அடுத்து தான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி விடுவதோடு இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறதா? என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இன்று வரை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் சிறப்பான முறையில் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். மேலும் திரை உலகில் மிகச்சிறந்த தம்பதிகளாக இவர்கள் திகழ்ந்து வருவதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version