இப்படி இருப்பவருடன் எப்படி படுக்கையை பகிர முடியும்.. யாஷிகா ஆனந்த் விளாசல்..!

விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் யாஷிகா ஆனந்த். பசங்க, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, சில நொடிகளில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் கிளாமர் டிரஸ்சில் வலம் வந்து பார்வையாளர்களின் மனங்களை கிறங்கடித்தவர் யாஷிகா.

மாடலிங் துறையில் ஆர்வம் உள்ள யாஷிகா ஆனந்த், சினிமாவிலும் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறார். எனினும் இவரது கவர்ச்சியான உடல்தோற்றம் காரணமாக பலரும் கவர்ச்சி படங்களில் நடிக்க இவரை அணுகுகின்றனர். இருட்டு அறையில் முரட்டுக்குத்து கூட கவர்ச்சியும், டபுள் மீனிங்ஸ் வசனங்கள் நிறைந்த ஒரு படமாகவே இருந்தது.

சமீபமாக நடிகைகள் பலரும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் தங்களை அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்தவர்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் நடிகை விசித்ரா, தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை, நைட் ரூமுக்கு வந்துடு என்று அழைத்ததை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது யாஷிகா ஆனந்தும் அதுபோன்ற ஒரு விஷயத்தை சமீபத்தில் ரசிகர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் நடிப்பதற்காக நடத்தப்பட்ட ஆடிஷனில் கலந்துக்கொள்ள அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு ஸ்கிரீன் டெஸ்ட் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அம்மாவை வெளியே அனுப்பிவிட்டனர்.

அதன்பின் அங்கு இருந்தவர், அட்ஜஸ்ட்மெண்டுக்கு நீங்கள் சம்மதித்தால், இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன், வாய்ப்பு தருகிறேன் என என்னிடம் கூறினார். திடீரென அவர் அப்படி கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முடியாது என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன்.

என் அப்பா வயதுள்ள அவர், என்னிடம் அப்படி கேட்டதை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதால் அவரது பெயரை சொல்லவில்லை. இந்த பிரச்னையையும் பெரிதுபண்ண விரும்பவில்லை.என்று கூறி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version