தன் வாழ்க்கையில் எப்படியும் ஒரு பிரபலமான மாடல் அழகியாக மாறிவிட வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டு இருந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்.
மாடலிங் கனவுகளோடு வளர்ந்த இவர் சினிமாவில் நடிக்கக்கூடிய ஆசையும் இடையில் ஏற்பட அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஹோலிவுட் நோக்கி நகர்ந்து வந்தார்.
இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நோட்டா என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக மாறிய இவர் இடையில் ஏற்பட்ட கார் விபத்தினால் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது உடல்நிலை தேறி விட்டதை அடுத்து சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி அத்து மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்திடம் உங்களை விட சின்ன வயசு பையனை டேட் பண்ணியது உண்டா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நடிகை யாஷிகா ஆனந்த், ஆம், பண்ணியிருக்கேன். நான் பள்ளியில் படிக்கும் போது அது நடந்தது. நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது 9-ம் வகுப்பு பையனுடன் டேட் பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார்.