“என் பின்னாடி இவர் எதுவமே பண்ணல.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்..” காதல் முறிவு குறித்து ஆல்யா மானசா பரபரப்பு பேச்சு..!

சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகைகள் பலரும் தற்போது வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையான அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் அசத்தலான நாயகியாக நடித்துவரும் ஆலியா மானசா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் ஆரம்ப காலத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து திரை உலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தார்கள்.

என் பின்னாடி இவர் எதுவமே பண்ணல..

இந்த தொடரில் நடித்து பிரபலமான இவருக்கு பல தொடர்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் இந்த தொடரில் தன்னோடு இணைந்து நடித்த நடிகர் சஞ்சீவி காதலித்து இருக்கிறார்.

அதைப்பற்றி அண்மை பேட்டியில் பேசியிருக்கும் ஆலியா மானசா ராஜா ராணி சீசன் ஒன்றில் நடித்த போது காதல் அரும்பியதை அடுத்து அந்த சீசன் முடிவதற்குள் இவர்கள் இடையே காதலில் பிரேக் அப் ஆகின்ற நிலை ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்.

அப்படி காதல் பிரேக்கப் ஆவதற்கு காரணம் யார் என்று நீங்கள் யோசிக்கலாம். சத்தியமாக அந்த நிலைமைக்கு காரணம் நான் தான் என்று ஓபன் ஆக கலா மாஸ்டரிடம் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

நான் தான் தப்பு பண்ணிட்டேன்..

மேலும் அந்த சமயத்தில் தான் மிகவும் சுய நலவாதியாக திகழ்ந்ததாகவும் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் சீரியலை விட்டு வெளியேற்றினால் மட்டுமே நான் அந்த சீரியலில் நடிப்பேன் என்று கூறினேன்.

இதை நான் அந்த சேனலில் ரெக்வஸ்ட் ஆக வைத்ததை அடுத்து அவர் சீரியல் மட்டுமல்ல என் வாழ்க்கையிலும் வேண்டாம் என்று பிரேக்கப் செய்ய நினைத்தேன்.

இதைத் தெரிந்து கொண்ட சஞ்சீவ் மிகவும் அமைதியாகவும் தன்மையோடும் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த பேச்சுக்காக அவர் எந்த விதத்திலும் என்னிடம் ரியேக்ட் செய்யவில்லை என் பின்னாடி ஆப்பு ஏதும் அவர் வைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் மௌனமாக அவள் என்னை வேண்டாம் என்று விட்டு விட்டால் பரவாயில்லை என்று பக்குவமாக இருந்ததே என்னை அவர் மீது கவனத்தை திருப்ப வைத்தது.

காதல் முறிவு குறித்து ஆல்யா மானசா பரபரப்பு பேச்சு..

அத்தோடு மட்டுமல்லாமல் தான் வேண்டாம் என்ற சொன்ன விஷயத்தை நினைத்து அவர் செட்டிலையே அழுக ஆரம்பித்திருக்கிறார். அதை பார்த்த பிறகு என்னால் தாங்க முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து நேரடியாகவே அவரிடம் சென்று நான் மன்னிப்பை கேட்டு விட்டேன். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் நான் வேண்டுமென்றால் வெளியேறி விடுகிறேன் அவர் நடிக்கட்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

அதுமட்டுமல்லாமல் நான் தவறு செய்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்றால் கிளம்பி விடுகிறேன் என்று புலம்பவும் ஆரம்பித்துவிட்டேன் என தனக்கு நடந்த அந்த காதல் பிரேக்கப் குறித்து ஓப்பனாக பேட்டியில் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

இதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் ஆலியாவிற்கும் சஞ்சீவிக்கும் இடையே இப்படி ஒரு பிரேக்கப் நடக்க இருந்ததா? என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version