எப்ப டும்.. டும்.. டும்.. சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ.. வைஷ்ணவி.. வீட்டில் நடக்கும் தீவிர ஏற்பாடு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி திருமண தேதி குறித்து வெளிவந்திருக்கும் செய்தி. 

வெள்ளி திரையில் ஜொலிக்கும் நடிகர் நடிகைகள் எப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்களோ அது போல சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வது தற்போது அதிகரித்துள்ளது. 

அந்த வகையில் ஏற்கனவே ஆலியா மானசா சஞ்சீவ், செந்தில் ஸ்ரீஜா, சித்து ஸ்ரேயா உள்ளிட்ட சீரியல் பிரபலங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். 

எப்ப டும்.. டும்.. டும்.. சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ..

அந்த வகையில் சில பிரபலங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என்றாலும் நட்பு ரீதியில் அறிமுகமாகிய பின் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 

அந்த வகையில் ஷப்னா ஆரியனைத் தொடர்ந்து பல்வேறு சீரியல் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயமும் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. 

வைஷ்ணவி.. வீட்டில் நடக்கும் தீவிர ஏற்பாடு..

இதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர்களது திருமணம் எப்போது என்ற கேள்விகளை எழுப்பியுள்ள சூழ்நிலையில் இவர்களது திருமணம் நவம்பர் 28-ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. 

எனினும் இவர்களது திருமணம் இந்த இடத்தில் நடைபெறும் என்பதை இன்னும் கூறப்படாத நிலையில் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடக்கும் என்ற விஷயம் லேசாக கசிந்துள்ளது. 

இந்த திருமண வரவேற்பில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Summary in English: Hey there, fans of “Siragadikka Aasai”! Exciting news is buzzing in the air as the wedding date for our beloved hero Vetri Vasanth and his sweetheart Vaishnavi has finally been announced! 🎉

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version