விஜய் கதை கேட்டு ஓ.கே சொன்ன பிறகு வேறு நடிகரை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா..`! - என்ன காரணம்..?


விஜய்யின் நடிப்பில் தளபதி-63 படம் அட்லீயின் இயக்கத்தில் படு வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தினை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம்.

மேலும் இப்படத்திற்கு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதே அவரது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

சிவா சொன்ன கதையை விஜய் ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறினர். ஆனால் பிறகு அந்த பேச்சு அத்துடன் நின்றுபோனது. தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் பண்ண ஆயத்தமாகி வருகிறார் சிவா. அதுவும் விஜய் ஓகே சொன்ன அதே கதையில் தான் இப்படம் உருவாகவுள்ளதாம்.

Advertisement