தமிழ் சினிமாவின் தல என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின்
மீது ரசிகர்களுக்கு பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, ஏனெனில்
அஜித் இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு
உருவாகியுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது, ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.
அப்படியிருக்கையில்
தமிழகத்தில் ஒரு பரோட்டா கடையில் பரோட்டா மாஸ் கொத்து புரோட்டா போடும் போது தோசைக்கல்லில் தாளம் போட, அங்கிருந்த அஜித் ரசிகர்கள் பலரும் அதற்கேற்றார் போல நடனம் ஆடி ‘அஜித்தே’ என்று சொல்லும் ரகளையான வீடியோ செம்ம வைரலாகி வருகின்றது, இதோ...
— Dheena Shankar (@Dheena_shankar) May 2, 2019