நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று நாடு முழுதும் உள்ள அவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், எப்போதும் எதிலும் வித்தியாசமாக இருக்கும் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பிறந்தநாள் வாழ்த்தை விஜய்க்கு ஆடியோ வடிவில் வாட்ஸ் அப் செய்ய, அதற்கு விஜய்யும் பதில் அளித்துள்ளார்.
அதை பார்த்திபன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து,49 நிமிடங்களில், பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத Mr விஜய் வணிகத்தின் உச்சத்தை என்றும் தொடுவார்+தொடர்வார்!
இதோ அந்த டுவிட்...