ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், 'இந்தியன் 2'. இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.
கமல் ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத் ஜாம்வால், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது.
இந்நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். என்ன காரணம் என்று கேட்டதற்கு, இந்தப் படத்தின் ஷூட்டிங் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்க வேண்டியிருந்தது.
அப்போது, என்னிடம் தேதிகள் இருந்தன. ஆனால் ஷூட்டிங் தள்ளிப்போய் இப்போது தான் படம் ஆரம்பமாகியுள்ளது. இப்போது, நான் ஒப்பந்தம் ஆகியுள்ள படங்களில் நடித்து கொடுக்க வேண்டும்.
கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் நான் படத்தில் இருந்து விலகியுள்ளேன். வேறு எதுவும் பிரச்சனை இல்லை என தெரிவித்துள்ளார்.