பிக்பாஸ் சரவணன் எங்கு இருக்கிறார்..? என்ன செய்கிறார்..? - இதோ புகைப்படம்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும், அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன், இரண்டு வாரங்களுக்கு முன்பு சேரன் - மீரா மிதுன் இடையேயான பிரச்னையை சமரசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கிட்டு பேசிய சரவணன், நானும் எனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை தவறாக இடித்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசினார். 

இது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அவரும், “நான் என்னுடைய கருத்தை கமல்ஹாசன் முன்னிலையில் முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. 


நான் செய்தது போல் யாரும் செய்ய வெண்டாம் என்றே கூற எண்ணினேன். நான் அப்படி பேசியது தவறுதான். அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். மன்னிப்பு கோரிய பின்னரும் சில தினங்களுக்கு முன்பு திடீரென வெளியேற்றப்பட்டார் சரவணன். 


அப்போது கன்பெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்ட சரவணனிடம், “இந்நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. பெண்களை தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை நாங்கள் வனமியாக கண்டிக்கிறோம். மீரா மிதுன் - சேரன் பிரச்னையால் இதை கவனிக்கமுடியவில்லை. 

இதன் காரணமாக நீங்கள் வெளியேற்றப்படுகிறீர்கள். உங்களுக்கு இடதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து வெளியேறுங்கள்” என்று பிக்பாஸ் கூறினார். மறுவார்த்தையின்றி அங்கிருந்து சரவணன் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டது குறித்து சனி அல்லது ஞாயிறு கிழமை நிகழ்சிகளில் கமல்ஹாசன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றி அவர் வாய்திறக்காதது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாயை திறந்தால் நாம் சிக்கிவிடுவோம் என பயந்து கொண்டு தான் கமல்ஹாசன் இதை பற்றி பேசாமல் எஸ்கேப் ஆகி விட்டார் என்று கூறுகிறார்கள். 

இந்த லட்சணத்தில் இவர் தனியாக கட்சி வேறு ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கிறார் என்று வசைபாடும் நெட்டிசன்களும் இருகிறார்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சரவணன் எங்கு இருக்கிறார்..? என்ன செய்கிறார்..? என்றே தெரியாமல் இருந்தது.  இந்நிலையில், வெளியேற்றப்பட்ட சரவணனுக்கு  தமிழக அரசு அறிவித்த கலைமாமணி விருதை நேற்று தனது குழந்தையுடன் வந்து வாங்கியுள்ளார் சரவணன். 


Advertisement