‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் எடுத்த ‘வடசென்னை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது.
இதைத்தொடர்ந்து வந்த ‘மாரி 2’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு படத்திற்கு கிடைக்க வில்லை, நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்ட "எனை நோக்கி பாயும் தோட்டா" படம் விரைவில் திரைக்கு வர தயாராகவுள்ளது.
மேலும், ‘வடசென்னை 2’ பாகத்திற்கு முன் வெற்றிமாறனின் இயக்கத்தில் வேறு ஒரு கதையில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ மூலம் சினிமா உலகில் இயக்குநராக தடம் பதித்த மாரி செல்வராஜ் உடன் ஒரு புதிய படத்தில் தனுஷ் இணைய இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இருவரும் இணையும் படத்திற்கு "கர்ணன்" என்ற தலைப்பை வைத்துள்ளார்களாம்.