10 நாளை நிறைவு செய்த பிகில் - உலகம் முழுதும் 10 நாள் வசூல் எவ்வளவு..? - முழு விபரம் இதோ


தீபாவளி கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கடந்த 25-ம் தேதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இப்படம் உலகம் முழுவதுமே பெரிய வசூல் சாதனை செய்து வருகின்றது, அதிலும் மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் 2 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது. 

இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் ரூ 220 கோடி வரை தற்போது வசூல் செய்துள்ளது. மேலும், இவை வரும் நாட்காளில் ரூ 250 கோடி வரை நீளும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர்.

Advertisement