இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாருமே இல்லையா..? - பிகில் குறித்து புலம்பும் பிரபலம்..!


நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் அட்லீ தெறி , மெர்சல் , பிகில் என இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். 

இதில் சமீபத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் அட்லிபிகில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த படத்தின் பாடலாசிரியர் விவேக், இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாருமே இல்லையா..? எனக்கும் ஒரு டீசர்ட் பார்சல் பண்ணுங்க ப்ரோ என்று புலம்பியுள்ளார்.


Advertisement