அலைபாயுதே படத்தின் மூலம் நடிப்புக் கடலில் காலெடுத்து வைத்த சொர்ணமால்யா முதல் படத்திலேயே நல்லா நடிக்கிறாரே என்று பெயர்வாங்கினார். தொடர்ந்து நடிப்பில் தீவிரமானார்.
இடையில் சிற்சில சர்ச்சைகள், சச்சரவுகள், ஒரு விவாகரத்து என வாழ்க்கைப் பயணம். இந்த நிலையில் மொழி படம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கித் தந்தது.
ஜோதிகாவின் நடிப்போடு சொர்ணாவின் நடிப்பையும் அனைவரும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். இதனால் நெகட்டிவ் இம்பாக்ட் ஏற்பட்டு விட்டது. சொர்ணமால்யாவுக்கு இப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தவர்கள், அவரை நாடுவதையே விட்டு விட்டனர்.
இடையில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இங்க என்ன சொல்லுது மற்றும் புலிவால் என இரண்டு படங்களில் நடித்தார். அதன் பிறகு பட வாய்புகள் இல்லாததால் நடனம், நாட்டியம் என தனது தொழிலுக்கே சென்று விட்டார்.
சொர்ணமால்யாவின் கையில் இப்போது படம் எதுவும் இல்லை. காரணம், மொழி
மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பது என்ற அவரது தீர்மானமான முடிவே. நல்ல
படம் வரட்டுமே என்று காத்திருக்கிறாராம்.