முடிந்தது "பிகில்" ஓட்டம் - மொத்த வசூல் எவ்வளவு - இதோ முழு விபரம்


நடிகர் விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியான திரைப்படம் பிகில். நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்த இந்த படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை கருவாக கொண்டிருந்தது. 

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் செய்தது. வெற்றிகரமாக ஓடி வந்த பிகில் படத்தின் கடைசி நாள் இன்று. ஆம், நாளை எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகிறது. 

தற்போது பிகில் திரைப்படம் ஓடி வரும் 90% திரையங்குகள் நாளை எனை நோக்கி பாயும் தோட்டா-வை திரையிடுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் பிகில் படம் 138 கோடியே 87 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகம் முழுதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இந்த படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்கிறார்.

Advertisement