பிகில் படத்தை பார்த்த நடிகர் அருண் விஜய் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!


அஜித், விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமானாலும் வெற்றிக்காக பல காலம் போராடியவர் அருண் விஜய். தடையற தாக்க படம் இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

அதன் பிறகு தன் படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அஜித்தின் என்னை அறிந்தால் வில்லன் பாத்திரத்தில் விக்டராக நடிக்க அந்தப்பாத்திரம் தமிழ்நாடு முழுதும் மிகப்பெரிய ஆதரவை பெற்றுத் தந்தது. 

இதன் பிறகு குற்றம் 23, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்த ஆண்டில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்த தடம் படம் பெரும் வெற்றியை பெற்றது. 

இப்போது அவர் நடித்த சாஹோ படத்தின் மூலம் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ள அருண் விஜய் தனது அடுத்த படமான “மாஃபியா” படத்தை முடித்துவிட்டார். மேலும் அவர் நடிப்பில் “அக்னி சிறகுகள்”, “பாக்ஸர்” படங்கள் விரைவில் முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார் அருண் விஜய். அவ்வபோது, ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள்,மற்றும் படங்கள் குறித்து அப்டேட்கள் என எதையாவது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டே இருப்பார்.

அந்த வகையில், சமீபத்தில் பிகில் படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்த அவர்  "படம் முழுதும் என்டர்டெயின்மென்ட் மற்றும் எமோஷனலாக இருந்தது. குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தேன்" என்று கூறியுள்ளார்.

Advertisement