"அவன் தலைய கொண்டு வரவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்-டா" - என் இறுதி ஆசை - வில்லன் அர்ஜுன் தாஸ் உருக்கம்..!


தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 64 வேகவேகமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் கமிட் ஆகியுள்ளார். 

இவர் கைதி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. அவன் தலைய கொண்டு வரவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்-டா என்று கம்பீர குரலில் மிரட்டி எடுத்தார்.

இந்நிலையில், இதை தொடர்ந்து தற்போது தளபதி 64 படத்தில் கமிட் ஆனது ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷம், இதுக்குறித்து இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளேன். ஒரு நடிகராக இது என் நிகரற்ற இறுதி ஆசை, சிறந்த ஊக்கம், கைதி ரிலிஸானதில் இருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement