"வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடு.." - அட்லியிடம் கேட்கும் "பிகில்" தயாரிப்பு நிறுவனம்..? - ரசிகர்கள் ஷாக்..!


இயக்குனர் அட்லீ நடிகர் விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து இயக்கிய பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் இயக்குனர் பட்டியலுக்குள் வந்துவிட்டார். 

இயக்குனர்கள் ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு அனைவரும் விரும்பும் கமர்ஷியல் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார். ஆனால், "பிகில்" படம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக 30 சதவிகிதம் அதிகமாகிவிட்டதால்,  படத்தை விற்கும் போதே பெரிய தொகைக்கு தான் விற்றார்கள். 

இதனால், போட்ட பணம் மட்டுமே பலருக்கும் கைக்கு வந்தது, யாருக்கும் பெரியளவில் நஷ்டமும் இல்லை. நிலைமை அப்படியிருக்க சமூக வலைத்தளத்தில் பிகில் தயாரிப்பு நிறுவனம், அட்லீயிடம் சம்பளத்தில் ரூ 3 கோடி திருப்பி கேட்டதாக ஒரு தகவல் பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது. 

இது குறித்து படகுழுவிற்கு நெருங்கிய வட்டரங்களிடம் விசாரித்த போது அப்படி எதுவும் நடக்கவில்லை. அட்லீயிடம் யாரும் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்கவில்லை.அது வெறும் வதந்தி மட்டுமே என்று கூறுகிறார்கள். 

அட்லி குறித்து பல குற்றசாட்டுகள் வந்தாலும். இந்த சம்பள பணத்தை திரும்ப கேட்ட விஷயம் குறித்து வந்த செய்தி பொய் என்பதே உண்மை.

Advertisement