நடிகை சோனா கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன்வாசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த சோனா 2008-ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
நான் தான் நமிதாவுக்கு போட்டி என்று களத்தில் இறங்கிய இவர் இடையில் இயக்குனர் சரண் மீது பாலியல் சீண்டல் புகாரை வைத்தார். அதன் பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
இதனால் மலையாள சினிமா பக்கம் கரை ஒதுங்கினார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பச்ச மாங்காய் என்ற ஒரு படத்தில் நடித்திருந்தார். சில பிரச்னைகளால் பொட்டியில் தூங்கிக்கொண்டிருந்த அந்த படம் இப்போது ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது. ஆனால், நடிகை சோனா ஷகிலா ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி காட்சிகளும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது.
இதனை தொடர்ந்து, ட்ரைலரை மட்டும் பார்த்து விட்டு என்னை அடுக்க ஷகிலா என்று கூறாதீர்கள். இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. என்னை கவர்ச்சி நடிகை என்று சித்தரிக்க வேண்டாம். படம் வெளியான பின்பு அனைவரும் இதனை புரிந்து கொள்வார்கள்.