பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதாவை சந்தித்த நடிகர் சரவணன் - என்ன காரணம் தெரியுமா?


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சரவணன் ரசிகர்களிடம் நன் மதிப்பை பெற்றார். ஆனால், பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையாக பிக்பாஸ்வீட்டிற்கு வெளியே செய்த தவறுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன்.

ஆனால்,வார இறுதி நிகழ்ச்சியின் "கோர்த்து விடுறான்"என்று நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் கடுப்பான கமல்ஹாசன் சரவணனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இதன் பிறகு,பிக்பாஸ் சம்பந்தப்பட்ட எந்தநிகழ்ச்சியிலும் நடிகர் சரவணனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சாண்டி, கவின், மீரா மிதுன் ஆகியோர் நடிகர் சரவணனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து விட்டு வந்தனர்.


சரவணனை போலவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. ஆனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்த விஷயத்திற்க்காக வெளியேற்றப்பட்டார். இப்போது இருவரும் சேர்ந்து நடிக்கும் விளம்பர படப்பிடிப்பு ஒன்று சென்னையில் நடகின்றது. அதற்காக, இருவரும் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement