தர்பார் vs பட்டாஸ் : மாமனார் மருமகன் வசூல் வேட்டை - மாஸ் வசூல் விபரம்..!


2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியான இரண்டு புதிய படங்கள் தர்பார், பட்டாஸ். இந்த இரண்டுமே ஒரே வீட்டு பிரபலங்களின் படங்கள் மாமனார், மருமகன் என 2020 பொங்கல் பணடிகையை ஆக்கிரமித்து விட்டனர்.

அவர்களது குடும்பத்தை தாண்டி அவரது ரசிகர்கள் இப்படங்களை தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். தர்பார் படம் 9 நாட்களிலும், தனுஷின் பட்டாஸ் 3 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளன. ஆனாலும் போட்டிக்கு என்ற படமும் இல்லாததால் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

சரி, இப்போது சென்னையில் மட்டும் இப்படங்களின் இதுவரையிலான வசூல் விவரத்தை பார்ப்போம்.

    தர்பார்- ரூ. 11.85 கோடி ( 9 நாள் முடிவில் )
    பட்டாஸ்- ரூ. 1.41 கோடி ( 3 நாள் முடிவில் )

பொதுவாகவே, ஒரு படம் சென்னையில் என்ன வசூல் செய்கிறதோ அதனை பத்தால் பெருக்கினால் என்ன தொகை வருகிறதோ அதுவே ஒட்டு மொத்த தமிழகத்தில் வசூல் என்பது எழுதப்படாத விதி.

அந்த விதி தர்பார் விஷயத்திலும் நிருபிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் 113 கோடி ரூபாயை ஒன்பது நாளில் வசூல் செய்துள்ளது தர்பார். 

மேலும், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் சென்னையில் மட்டும் 14 கோடி ரூபாய்களை வசூல் செய்தது. தமிழகம் முழுதும் 142 கோடியை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement