அட.. ஷ்ரூவ்வ்வ்வ்... கரன் இப்போது எப்படி இருக்காரு பாருங்க.. மிரட்டல்..! - வைரலாகும் வீடியோ..!


மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்திலும், தமிழிலும் 70 படங்களில் நடித்தவர் கரன். 1972-ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 

தமிழில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்த “முருகன் அடிமை” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1991-இல் “தீச்சட்டி கோவிந்தன்” என்ற படத்தில் மதிப்பிடப்படாத கதாபாத்திரத்தில் நடித்தவர் ரஜனிகாந்தின் “அண்ணாமலை” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதனைத் தொடர்ந்து “சந்திரலேகா”, “கோயமுத்தூர் மாப்பிள்ளை”, “காதல் கோட்டை”,  “காலமெல்லாம் காத்திருப்பேன்”, “காலமெல்லாம் காதல் வாழ்க”, “காதலி”,  “நேருக்கு நேர்”, “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “பட்ஜெட் பத்மநாபன்”, “குங்குமப் பொட்டு கௌண்டர்” போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், ஷ்ரூவ்வ்வ்வ்.. என்ற இசை பிரபலமான பிறகு அடுத்து அவர் படங்களில் எப்போது வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் அவர் அண்மையில் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25-ம் ஆண்டு திருமண விழாவில் கலந்துகொண்டார்.

இதில் ரசிகர்கள் அவரை பார்த்து குஷியாக தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.