முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை..! - யாரு தெரியுமா..?


இயக்குனர் "ஆதிக் ரசிச்சந்திரன்" இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிக்கும் ரொமான்டிக் திரில்லர் படம் "பகீரா". இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் தயாரித்து வருகின்றது.

இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. தற்போது, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பகீரா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஒன்றல்ல, இரண்டலா மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 

அவர்களில் அனேகன் பட ஹீரோயின் "அமைரா தஸ்தூர்" ஒரு ஹீரோயினாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இரண்டாவது ஹீரோயினாக விஜய் சேதுபதியின் நடுவுல சொஞ்சம் பக்கத காணோம், புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்திரியை தேர்வு செய்துள்ளது படக்குழு. 

மூன்றாவது, ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement