வயது வித்தியாசம் இல்லாமல் அஜித்துக்கு ரசிகர்கள் உண்டு. அஜித்
திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் மகிழ்ச்சியில் திளைத்துக்
கொண்டு இருப்பவர்கள் வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல.
சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது
இருக்கிறது. பிரபலங்களுக்கு ரசிகர்கள் இருப்பது வாடிக்கைதான். ஆனால் பல
பிரபலங்களே ரசிகர்களாக இருக்கும் நடிகர்களில் அஜித்குமார்
மிகமுக்கியமானவர்.
தமிழ் சினிமாவின் தல் என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றுள்ளது, கொரொனா பிரச்சனைகள் முடிந்த கையோடு இப்படத்தின் படபிடிப்பு வெளிநாட்டில் தொடங்குமாம். இந்நிலையில் அஜித் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தை ரீமேக் செய்து மெகா ஹிட் கொடுத்தார், அந்த படம் அஜித்தின் திரைப்பயணத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.
ஆனால், அஜித் நீண்ட வருடங்களாக "ஜானி" படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என மிகவும் ஆசையாக இருந்தாராம். அதுக்குறித்து அப்படத்தின் இயக்குனர் மகேந்திரன் அவர்களை சந்தித்து பேசினாராம். ஆனால், அவரால் அதில் நடிக்க முடியாமல் போனது, இந்த தகவலை மகேந்திரன் மகன் ஜான் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்