ஒத்த கேள்வியில் விஜய்- அஜித் ரசிகர்களிடையே சண்டையை கொழுத்தி விட்ட மாஸ்டர் பட நடிகை..!


பிரபல நடிகை ஒருவர் டுவிட்டரில் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார். விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். 
 
இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி மீண்டும் அவர்களுக்குள் மோதலை உருவாக்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 
 
சுரேகா வாணி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று கூறியிருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் மோதலை கிளப்பியது. அஜித் ரசிகர்கள், விஜய் நடித்த சில படங்களின் பெயர்களை சொல்லி அவற்றைப் பாருங்கள் என்றனர். 
 
அதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் அஜித் நடித்த படங்களை சொல்லி அவற்றைப் பாருங்கள் என்றனர். சுரேகா வாணி இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
நடுநிலை ரசிகர்கள் இந்த பிரச்சினையில் குறுக்கிட்டு உங்களுக்கு வேறு வேலை இல்லையா?. தேவை இல்லாமல் இப்படி கேள்வி கேட்டு ரசிகர்கள் மோதலை ஏற்படுத்துகிறீர்களே? நீங்கள் என்ன வேற்றுகிரகவாசியா? விஜயின் ஆக்ஷன் படங்களை கூகுளில் தேடினால் கிடைத்து விட போகின்றது.. உங்களுக்கு எதுவும் தெரியாதா என்று சுரேகா வாணியை சாடி வருகின்றனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்