தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அகத்தியன் அதிலும் குறிப்பாக இவர் அஜித்தை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து இவரது மகள் விஜயலக்ஷ்மி சினிமா உலகில் ஹீரோயினாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், சென்னை 600028 போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் செல்லத்துக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சின்னத்திரை பக்கம் வந்து சன் டிவியில் நாயகி சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தார்.
அதேநேரத்தில் பிக் பாஸ் சீசன் 2 வில் வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு அழைப்பு வந்ததால் நாயகி தொடரில் இருந்து பாதியில் விலகி விட்டு இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு தனது அழகான பேச்சி மற்றும் திறமையின் மூலம் மக்கள் மனதில் இடத்தை பிடித்தாலும் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அவரால் பிடிக்க முடியாமல் போனது.
பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியிலே மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்தார். பின்பு கொஞ்ச நாட்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பக்கம் காணாமல் இருந்த இவர் மீண்டும் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கும் survivor நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை அங்கு வெளிக்காட்டிக் கொண்டு வருகிறார்.
கடுமையாக போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குட்டையான உடையைப் போட்டுக்கொண்டு வலம் வருகிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அங்கேயும் உங்களுக்கு கவர்ச்சி காட்ட தோணுதான்னு கூறி கமெண்ட் அடிக்கின்றனர்.
0 கருத்துகள்