சுசீந்திரன் இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. பிறகு ‘சகாக்கள்’, ‘கொண்டான் கொடுத்தான்’, ‘பாண்டியநாடு’, ‘மாங்கா’ படங்களிலும் நடித்தார். எனினும் எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை.
இப்போது ‘செவிமி’ என்ற படத்தில் நடிக்கிறார். “நான் கன்னட நடிகை என்றாலும், தமிழ் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறேன். அனைத்தும் நல்ல படங்கள். குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நான் எதிர்பார்த்தபடி பிரபலமாக முடியவில்லை.
இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். “கவர்ச்சியான வேடத்தில் நடிப்பது பிரச்சினை இல்லை. ஆனால் குடும்பப் பாங்கான வேடத்துக்கு மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன். இதனால் தான் அத்தகைய வேடங்களில் விரும்பி நடிக்கிறேன்.
இப்போது நான் நடிக்கும் ‘செவிலி’ படத்திலும் குடும்பப் பாங்கான வேடம்தான். நான் இதுவரை நடித்த பாத்திரங்களில் இது மிகவும் பிடித்தது. “திறமை மட்டும் இருந்தால் போதாது. படமும் நன்றாக ஓடினால்தான் பிரபலமாக முடியும். பெயரும் புகழும் கிடைக்கும்.
நடிப்புத்திறமை மட்டும் இருந்தால் போதாது. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும்,” என்கிறார் கீர்த்தி ஷெட்டி.வசீகரமான அழகும், அசத்தலான நடிப்பும் இருந்தாலும் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோயின்களின் பட்டியல் மிக நீளம்.
அப்படியிருக்க வெகு சில நடிகைகள் மட்டுமே முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.
முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் கீர்த்தி ஷெட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறிய கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
0 கருத்துகள்