கவர்ச்சி நடிகை சோனா, அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சிறு தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த தமிழ் பின்னர் காணமுடியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா.
இப்போது சில மலையாள படங்களிலும், தமிழ் படங்களிலும் நடித்து வர, திடீரென்று அபி டெய்லர்ஸ் என்னும் சீரியலில் நடிக்க போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சோனா, நல்ல கதாப்பாத்திரம் அமைந்ததால் “அபி டெய்லர்ஸ்” சீரியலில் நடிக்கிறேன்.
இப்போதெல்லாம், சமூக வலைதளங்களில் நடிகர்கள், நடிகைகளை பற்றி மோசமாக கமெண்ட் அடிப்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும், அவர் கூறியதாவது, சமூக வலைதளங்களால் நிறைய பிரச்சனை வருகிறது. நான் உள்பட பல நடிகைகளை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார்.ஒரு படத்தை பற்றி, அவர்களது நடிப்பை பற்றி, விமர்சிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
ஆனால், படுக்க வ ரியா என்றெல்லாம் கேட்கிறாங்க. இது போன்ற விமர்சனங்களை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவங்க எல்லோர் வீட்டிலும் பொம்பளைங்க இருக்காங்க. அதனால் இது போன்று கமெண்ட்ஸ் எழுதும்போது கொஞ்சம் யோசித்தால் நல்லா இருக்கும். இது வேண்டுகோள் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
மேலும், பல நடிகைகள் சொல்லவே கூச்சப்படும் ஒரு விஷயம் குடிப்பழக்கம். ஆனால், சோனா சின்னவயதில் எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
பச்சமாங்கா திரைப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சோனா.
0 கருத்துகள்