இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் அமேசான் ஓடிடி விழியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் சென்னை பாஷை பேசி, நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ள துஷாரா விஜயன்.
கிளாமரில் சற்று தூக்கலாக வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே. துஷாரா விஜயன் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார்.
23 வயதாகும் இவர், பிறந்து வளர்த்தது எல்லாம் சென்னையில் தான். தன்னுடைய பள்ளி படிப்பை கூட, சென்னையில் தான் துஷாரா முடித்துள்ளார்.
இவருடைய நடிப்பில் ஏற்கனவே 'போதை ஏறி புத்தி மாறி' என்கிற படம் வெளியானாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் தான்.
இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக, இழுத்து சொருகிய சேலை, இரட்டை மூக்குத்தி என வலம் வந்திருக்கும் துஷாரா... உண்மையில் அல்ட்ரா மாடர்ன் கேர்ள்.சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று பொறியியல் படித்தார்.
ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு பேசன் டிசைனிங் படித்து மாடலிங், குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்து கொண்டிருந்தார் துஷாரா விஜயன்.
அப்படியான சூழ்நிலையில்தான் சார்பட்டா பரம்பரையின் நாயகியானார் துஷாரா விஜயன்.